Published Date: February 25, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரையில் நடந்த முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் அமைச்சர் பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு மருந்துகள்,மாத்திரைகள் விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆக. 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் அறிவித்தார். இதனை அடுத்து இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் கடந்த அக். 29 ல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கான பணிகள் மாவட்ட அளவில் மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவசேவை கழக காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ரா சூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உருவான 1000 முதல்வர் மருந்தகங்களை சென்னையில் நேற்று நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன்படி மதுரை மாநகரில் செனாய் நகர், ஆரப்பாளையம், வில்லாபுரம், முடக்கு சாலை உள்பட மாவட்ட முழுவதும் 51 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. மதுரை செனாய் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
Media: Dinakaran